உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், காளைகள் அவிழ்த்து விட்டதில் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. உள்ளூர் பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், காவலர்கள் ஆகியோர் பரிந்துரை செய்த காளைகள் மட்டுமே வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வருடம் முழுக்க கண்ணும் கருத்துமாகப் பார்த்து, பராமரித்து வளர்த்து வந்த காளையை, ஜல்லிக்கட்டில் அவிழ்க்க முடியாமல் போனதே என்ற விரக்தியில் இளைஞர் பொறுமித் தள்ளும் வேதனைக்குரிய காட்சி.காளைகள் அவிழ்ப்பதில் பாரபட்சம்உலகப் புகழ்பெற்ற மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 600 மாடுபிடி வீரர்கள் களமிறங்கியதாகவும், ஆயிரம் காளைகள் அவிழ்க்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்து டோக்கன் பெற்ற காளைகளில் 1000 காளைகள் அவிழ்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், காளைகள் அவிழ்ப்பதில் பாரபட்சம் காட்டப்பட்டதாக பகீர் புகார் எழுந்துள்ளது. அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் பிரமுகர்கள், ஆளும் கட்சியினர் உள்ளிட்டவர்களின் பரிந்துரையின்படி டோக்கன் இல்லாத பல காளைகள் அவிழ்க்கப்பட்டதாகவும், செலவு செய்து காளையை அழைத்து வந்த தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகவும் காளை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.காளைகளுக்கு சிபாரிசுஜல்லிக்கட்டுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்கு தான் ஆன்லைனில் டோக்கன் ஒதுக்கப்பட்டதாக கூறும் திருச்சியை சேர்ந்த முருகேசன், அடிச்சு புடிச்சு உள்ளே செல்வதற்குள் போட்டி முடிந்து வெறுங்கையோடு திரும்பி செல்வதாக வேதனை தெரிவித்தார். ஆன்லைன் டோக்கன் முறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குமுறிய அவர், மறைந்த தமது தந்தை கூறிய சொல்லுக்காக, துபாயில் இருந்து விடுமுறை எடுத்து வந்தும் பயனில்லை என ஆதங்கம் தெரிவித்தார். டோக்கன் நம்பர் ஆயிரத்திற்கு உள்ளாக இருந்தும் கூட காளைகளை அவிழ்க்க விடவில்லை என்றும், 500 டோக்கன்களுக்கு பிறகு ரெக்கமண்டேஷன் காளைகள் மட்டுமே அவிழ்க்கப்பட்டதாகவும் புகார் கூறுகின்றனர்.அரசு தடுக்க வேண்டும் என கோரிக்கைவலையப்பட்டியிலிருந்து 4 ஆயிரம் ரூபாய் செலவு செய்து காளையை அழைத்து வருவதாகவும், மூன்று போட்டிகளில் ஒரு போட்டி மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கூறிவிட்டு, அதிலும் காளையை அவிழ்க்க முடியவில்லை என்றால் எப்படி? என்றும் ஆவேசமாக இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.காளைகள் அவிழ்க்கப்படுவதில் எவ்வித தலையீடுகளும் இருக்க கூடாது என்பதற்காக தான் ஆன்லைன் முறையில் டோக்கன் வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்ட நிலையில், வாடிவாசலில் அமர்ந்து கொண்டு ரெக்கமண்டேசனில் காளைகள் அவிழ்க்கப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையும் பாருங்கள் - விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த CBI