தருமபுரி அருகே வாங்கிய கடனை திருப்பித் தர முடியாத குடும்பத்தினரை, செங்கல் சூளையில் கொத்தடிமைகள் போல் வேலை வாங்கி வருவதாக விஏஓ மீது புகார் எழுந்துள்ளது. இருளப்பட்டி பஞ்சாயத்திற்கு உள்பட்ட மலை அடிவாரத்தில் பல ஏக்கர் அளவில் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளின் திருமணத்திற்காக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய குடும்பத்தினரை, திருவள்ளூரில் விஏஓவாக உள்ள இளங்கோவன் தனது செங்கல் சூளையில் கொத்தடிமைகள் போல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பள்ளிக்கு செல்லும் சிறுமியை கூட விட்டுவைக்காமல் கொளுத்தும் வெயிலில் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து உயர் அதிகாரிகள் முறையான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.