சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே உள்ள KFC உணவகத்தில் வாங்கிய சிக்கனில் துர்நாற்றம் வீசியதால் கடை ஊழியர்களிடம் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்தார். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் எதிரே உள்ள KFC உணவகத்தில் கோபிநாத் என்பவர் 929 ரூபாய் கொடுத்து வாங்கிய கிரிஸ்பி சிக்கனிலிருந்து இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. சிக்கன் சரியாக வேகாமலும், ரத்தம் உறைந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்து, சிக்கனை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்ற கோபிநாத் கடை ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.