சென்னை கொடுங்கையூர் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. கொடுங்கையூர் திருவள்ளுவர் பகுதியை சேர்ந்த முகமது ரபிக் என்பவரது வீட்டின் கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், 3வது குறுக்கு தெருவில் உள்ள கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து பார்த்த போது பிறந்த ஆண் குழந்தையின் சடலம் மிதப்பதை கண்டார். அவர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.