உலக நன்மை வேண்டி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யப்பன் சுவாமிக்கு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. உத்தாணி ஸ்ரீ முத்து முனியாண்டவர் ஆலயத்தில் உள்ள அய்யப்பன் சுவாமிக்கு 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் பூக்களை தூவி அர்ச்சனை செய்து சகஸ்ரநாமம் செய்த நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.