திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மழையில் நனைந்தபடியே ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூரில் காலை முதலே மிதமான மழை பெய்து வரும் நிலையில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கடலில் புனித நீராடினர். பக்தர்கள் மழையில் நனைந்தபடியே கோவில் யானை தெய்வானையிடம் ஆசீர்வாதம் பெற்று சென்றனர்.