இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிடாரிகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் கருப்பண்ணசாமி கோவிலில், வருடாந்திர புரட்டாசி பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை ஒட்டி சுவாமிகளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரமும், தீபாதாரணையும் நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளம், வானவேடிக்கைகள் முழங்க பக்தர்கள் அழகுவேல் எடுத்து தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.