நெல்லை மாவட்டம் வள்ளியூர் அய்யா வைகுண்டர் வளர்பதியில் 15ஆம் ஆண்டு மாசி திருவிழாவை முன்னிட்டு திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அய்யா வைகுண்டர், இந்திர வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் செண்டை மேளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார்.