நெல்லை பாளையங்கோட்டையில் அய்யா வைகுண்டர் கோயிலில் நீதிமன்ற உத்தரவை மீறி சமையல் செய்ய முயன்ற பக்தர்களின் பாத்திரங்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் சுமார் 50 பேரை போலீஸார் கைது செய்தனர். அய்யா வைகுண்டர் திருக்கோயிலில் ஒரு தரப்பினர் நீதிமன்ற உத்தரவின்படி அய்யா அவதார விழாவை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி அன்னதானம் வழங்குவதற்காக அய்யா கோயில் பக்தர்கள் சமையல் செய்ய முயன்றனர்.