சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில், பா.ம.க. தலைவர் அன்புமணி, பாரம்பரிய முறைப்படி தலைப்பாகை அணிந்து சாமி தரிசனம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த பாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி, சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தலைமைப்பதி நிர்வாகம் சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி, தலையில் தலைப்பாகை அணிந்து கொண்டு, பதியை சுற்றி வலம் வந்து, அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தார். அய்யா வைகுண்டர் ஆறாண்டு காலம் தவம் இருந்த வடக்கு வாசலுக்கு சென்று, அன்புமணி சாமி தரிசனம் செய்தார்.