ஆயுதபூஜை தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் மக்களால், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம் செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதோடு, விமான டிக்கெட்டுகளின் கட்டணங்களும் மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளன. சென்னை- மதுரை இடையிலான விமான கட்டணம் 4,200 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 18,626 வரை அதிகரித்துள்ளது. சென்னை- தூத்துக்குடி விமான கட்டணம் 5006 ரூபாயில் இருந்து 13,626 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போல் பிற நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணங்களும் கடுமையாக உயர்ந்துள்ளன.