ஆயுத பூஜை விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்கு ஏற்ப இன்று மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ ரயில்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் 6 நிமிட இடைவெளியில் இயங்கும் என்றும் காலை 5 மணி முதல் 8 மணி வரையும் மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 7 நிமிட இடைவெளியில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இரவு 10 மணி முதல் 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் 15 நிமிடங்களுக்கு பதிலாக 7 நிமிட இடைவெளியில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.