சென்னை அயனாவரத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 50ம் ஆண்டு பொன் விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.முன்னதாக மாதா முகம் பொறிக்கப்பட்ட பெரிய கொடி முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புதிய கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.தொடர்ந்து அருட்பணி மரியலூயிஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.