நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக, காவல்துறையினர் கொண்டு வந்துள்ள செயலி பதிவிறக்கம் செய்யும் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.கேஎஸ்ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற நிகழச்சியில் காவல்துறை சார்பில் 181 இலவச உதவி எண் மற்றும் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.