அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது ட்ரோன் கேமரா பறந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டிருந்த போது, அதனை படம் பிடித்து கொண்டிருந்த ட்ரோன் கேமரா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் மீது விழுந்தது.