தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சேலத்தில் பொதுமக்கள் இனிப்பு மற்றும் கார வகைகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என மாவட்ட உணவு பாதுக்காப்புத்துறை அலுவலர் அறிவுறுத்தல் வழங்கினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்டம் முழுவதும் இருந்து இனிப்பு, கார விற்பனை மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். அங்கு நிறம் சேர்கப்பட்ட மற்றும் சேர்க்கப்படாத இனிப்பு, கார வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.