குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர். கோவை பந்தய சாலையில் கிட்டத்தான் 2024 என்ற பெயரில் நடைப்பெற்ற இப்போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர் உட்பட ஏராளமானோர் நீல நிற தொப்பி மற்றும் உடை அணிந்து கையில் பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.