திருச்சி துறையூர் பேருந்து நிலையம் அருகே, சின்ன ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில், கழிவுநீர் கலப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும், விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உருவாகியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.