தூத்துக்குடி மாவட்டத்தில் தைப்பொங்கல் மறுநாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி தூத்துக்குடியில் மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் மோகன் ஐயர் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி 3வது மேம்பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த சிறுவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை மடக்கி பிடித்தார். மேலும் அவர்களிடம் காவல் ஆய்வாளர் மோகன ஐயர் பேசும் போது கையில் இலட்சக்கணக்கில் நகை அணிந்திருக்கும் போது ஹெல்மெட் அணிந்து உயிரை பாதுகாப்பதில் என்ன ஒரு சிரமம் என கேள்வி எழுப்பினார் மேலும் வாகன சோதனையின் போது இருசக்கர வாகன சீட்டின் கீழ் ஹெல்மெட்டை வைத்துக் கொண்டு ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஏன் இவ்வளவு சோம்பேறியாக இருக்கிறார்கள் தாங்கள் உயிர் முக்கியம் அல்லவா? என அவர்களுக்கு அறிவுரை வழங்கி மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் வாகனத்தை வழங்கினார்.இதையும் படியுங்கள் : வெளிநாடுகளை சேர்ந்த அகதிகள் இடமாற்றம்