ஆசிரியர் தினத்தை ஒட்டி பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த சிறந்த ஆசிரியர்களுக்கு 'ஆசிரியர் செம்மல்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.சென்னை மயிலாப்பூரில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்தநிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கான பதக்கங்களையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.