தமிழகத்தில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கி ஆயிரம் அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்த மருத்துவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் வடநெம்மேலியில் நடைபெற்ற விழாவில், நடிகை கௌதமி, செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி, நடிகர் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விருது வழங்கினர்.