இந்திய விமானப் படையின் 92வது நிறுவன தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் விமானப் படையின் ஹெலிகாப்டர்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ், டகோட்டா மற்றும் ஹார்வர்ட் உள்பட 72 வகையான விமானங்கள் பங்கேற்கின்றன. இந்த விமானங்கள் தாம்பரம் விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் சாகசத்தை நிகழ்த்தவுள்ளன. 21 வருடங்களுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சி என்பதால் அதனை காண பொதுமக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.