தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பால்வண்ணநாதர் சாமி கோயிலில் ஆவணி தவசு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் உள்ள பால்வண்ணநாதர் சாமி கோயிலில் ஆவணி தவசு திருவிழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வந்தது. நாள்தோறும் சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தன. இந்தநிலையில், திருவிழாவின் 11-ம் நாள் நடைபெற்ற தேரோட்டத்தில் ஒப்பனை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.