தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, ஆலடிபட்டியில் ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழாவையொட்டி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆவணித் திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியாக நடந்த தேரோட்டத்தில் திரளான மக்கள் பங்கேற்று, வைத்தியலிங்க சுவாமி, அம்பாள் எழுந்தருளிய தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.கடந்த 26ஆம் தேதி செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் திருத்தேரில் வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.