கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெறும் கனவுடன் காத்திருந்த எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு ஷாக் கொடுக்கும் வகையில், வருகிற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் களமிறங்க பிரேமலதா யோசித்து வருவதின் பின்னணியில் அமைச்சர் புள்ளியும் மாஸ்டர் மைண்டாக காய் நகர்த்தி வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட திமுகவில் நிகழும் தேர்தல் கால அதிரி, புதிரி என்னென்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.பெண்கள் மத்தியிலும் நல்ல ஆதரவுரிஷிவந்தியம் தொகுதி என்றாலே கேப்டன் விஜயகாந்த் ஞாபகம் தான் வரும். 2011 சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தில் அமர்ந்திருந்தார் விஜயகாந்த். அதற்கு பிறகு 2016, 2021 ஆகிய இரு தேர்தல்களிலும் ரிஷிவந்தியம் தொகுதியில் திமுகவின் வசந்தம் கார்த்திகேயன் தான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக ரிஷிவந்தியம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் வசந்தம் கார்த்திகேயன், தொகுதியை முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. தொகுதியில் எங்கு சுப, துக்க நிகழ்ச்சிகள் நடந்தாலும் தவறாமல் ஆஜராகி விடும் வசந்தம் கார்த்திகேயன், 50 ஆயிரம், ஒரு லட்சம் என அள்ளிக் கொடுத்து ஆதரவை தக்க வைப்பவர் என சொல்லப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், ஆண்டு தோறும் தொகுதியில் இருந்து மேல்மருவத்தூருக்கு மாலை அணிந்து செல்லும் பெண் பக்தர்களுக்கு இலவசமாக பேருந்து வசதி, உணவு, மற்ற கோவில்களுக்கும் ஆன்மீக சுற்றுலா சென்று வர ஏற்பாடு என மொத்தமாக வசந்தம் கார்த்திகேயன் கவனித்துக் கொள்வார் என்பதால் பெண்கள் மத்தியிலும் நல்ல ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது. ரிஷிவந்தியம் தொகுதியில் வசந்தம் கார்த்திகேயனுக்கு இருக்கும் ஆதரவை பார்த்து எதிர்க்கட்சியினரே போட்டியிட தயங்கும் சூழல் தான் இருக்கிறது.பிரேமலதா, ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புஇந்த நிலையில், ரிஷிவந்தியம் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெறலாம் என கனவுடன் ஆசையாக காத்திருந்த வசந்தம் கார்த்திகேயன், சில நாட்களாக சீட்டு கிடைக்குமா? கிடைக்காதா? என யோசிக்கும் சூழலுக்கு ஆளாகியிருக்கிறார். இதற்கு காரணமே தேமுதிக, திமுக கூட்டணிக்குள் வந்தது தான். தேமுதிகவுக்கு 6 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்க திமுக முன் வந்திருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், தேமுதிகவின் விருப்ப தொகுதி பட்டியலில் ரிஷிவந்தியமும் ஒன்று. விஜயகாந்த் நின்று வெற்றி பெற்ற தொகுதி என்பதால் தேமுதிகவினருக்கு ரிஷிவந்தியம் தொகுதி செண்டிமெண்ட்டாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வருகிற தேர்தலில் பிரேமலதா, ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு என பேசிக் கொள்ளப்படுவதால், கூட்டணிக்கு ஒதுக்கப்படுமா? அல்லது தனக்கு சீட்டு கிடைக்குமா? என வசந்தம் கார்த்திகேயன் கையை பிசையும் நிலை ஏற்பட்டுள்ளது.மூன்றாவது முறை எம்.எல்.ஏ.வாக...இந்த விவகாரத்தில் அமைச்சர் புள்ளி ஒருவரின் காய் நகர்த்தலும் இருக்கிறது என கள்ளக்குறிச்சி மாவட்ட உடன் பிறப்புகள் மத்தியில் பேசிக் கொள்ளப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக எ.வ.வேலு இருந்து வரும் நிலையில், வசந்தம் கார்த்திகேயனின் வளர்ச்சி எ.வ.வேலுவின் கண்ணை உறுத்துவதாக கூறப்படுகிறது. மூன்றாவது முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று அமைச்சர் போஸ்ட்டிங் வாங்கி விட வசந்தம் கார்த்திகேயன் எத்தனிக்கும் நிலையில், அதற்கு செக் வைக்கும் வகையில் எ.வ.வேலு செயல்பட்டு வருவதாக சொல்கிறார்கள். ஆகையால், ரிஷிவந்தியம் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்க வேண்டும் என எ.வ.வேலு தான் வேகம் காட்டி வருகிறாராம். இருப்பினும் கூட, தனது செல்வாக்கை வைத்து ரிஷிவந்தியம் தொகுதியை தக்க வைக்கலாம் என வசந்தம் கார்த்திகேயன் முயற்சி செய்தும் வருகிறாராம்.அரசியல் வாழ்க்கையில் வசந்தம் வீசுமா? இது ஒரு பக்கம் இருக்க, வசந்தம் கார்த்திகேயனை தவிர்த்து வேறு யாருக்கு சீட்டு கொடுத்தாலும் அது திமுகவுக்கு தான் கடுமையாக BACK FIRE ஆகும் என்கிறார்கள் தொகுதிவாசிகள். ஒரு வேளை தேமுதிகவுக்கு ஒதுக்கினாலும் திமுகவினர் முழு அளவில் வேலை செய்து ஜெயிக்க வைப்பார்களா? என்பதும் சந்தேகம் தானாம். ரிஷிவந்தியம் தொகுதி தேமுதிகவுக்கு என தகவல் கசிந்ததில் இருந்து அரை மனதாக உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட ஆழம் பார்த்து வரும் வசந்தம் கார்த்திகேயனின் அரசியல் வாழ்க்கையில் வசந்தம் வீசுமா? என்பது திமுக தலைமை எடுக்கும் முடிவில் தான் இருக்கிறது. Related Link குறி வைக்கப்படும் பூவிருந்தவல்லி