சென்னையை அடுத்த தாம்பரத்தில் பள்ளி அருகே மாணவர்கள் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு அதிவேகமாக ஆட்டோ சென்ற சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. கக்கன் தெருவில் உள்ள தனியார் பள்ளி வளாகம் அருகே மாணவ, மாணவிகள் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு சென்ற ஆட்டோ குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.