ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த அக்காள்மடம் பகுதியில் ஆட்டோவும் டாட்டா ஏஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த ஆட்டோவும் ராமநாதபுரம் நோக்கி வந்த டாட்டா ஏஸ் வாகனும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், டாட்டா ஏஸ் ஓட்டுநர் மருத்துமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.