கள்ளக்குறிச்சியில் புதிதாக வாங்கிய ஆட்டோவில் குடும்பத்துடன் குல தெய்வம் கோவிலுக்கு சென்றபோது, ஆட்டோ தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தென் கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவர், புதிதாக வாங்கிய ஆட்டோவுக்கு பூஜை போடுவதற்காக அதில் குடும்பத்துடன் குலதெய்வன் கோவிலுக்கு சென்றுள்ளார். சேலம் சாலை அண்ணாநகர் அருகே ஆட்டோ சென்றபோது குறுக்கே வந்த இருசக்கரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகன ஓட்டி, மற்றும் ஆட்டோவில் இருந்தவர்கள் காயங்களுடன் உயிர்தப்பினர்.