தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மதுபோதையில் ஆட்டோ ஓட்டுநர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே சட்டையில் ரத்தக்கறையுடன் நின்றிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்த போது, விருதுநகருக்கு ரயிலில் சென்றவர்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கி மது வாங்க சென்றபோது ரயிலை தவற விட்டு பின்னர் ஆட்டோவில் பேருந்து நிலையத்திற்கு சென்றதாகவும் அப்போது அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதும் தெரிந்தது.