சென்னை அடையாறில் பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். அடையாறு தாமோதரபுரம் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் தங்கராஜ் கடந்த 19ஆம் தேதி பெசன்ட் நகர் வழியாக வந்த போது ஆறாம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அம்மாணவி ஆசிரியரிடம் கூறியதையடுத்து அவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் போக்சோவில் ஓட்டுநர் தங்கராஜ் கைது செய்யப்பட்டார்.