கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைக்க வைத்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மாணவிகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் வேலையை செய்துவந்த தௌபிக் உமர், தனது ஆட்டோவில் பயணித்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.