தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறி, மருத்துவரின் கார் கண்ணாடியை அடித்து உடைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். ஆனால், ஆட்டோ ஓட்டுநரை கைது செய்ய விடாமல் அவரது உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த தந்தையை இழந்த 12 வயது சிறுமியை, திராட்சை தோட்டம் வைத்துள்ள மருத்துவர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி, பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டதாக அவரது தாயார் போலீஸில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்காததாகக் கூறி, அவரது உறவினரான ஆட்டோ ஓட்டுநர் பொன்னுபாண்டி, மருத்துவரின் கார் கண்ணாடியை அடித்து உடைத்தார்.இதையும் படியுங்கள் : கல்குவாரி விவகாரத்தில் கத்தியால் குத்தி இளைஞர் கொலை இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்