விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, ஆட்டோவில் சென்ற பெண்ணை, கத்தியால் தாக்கி விட்டு நான்கரை சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் யானைக்குழாய் தெருவை சேர்ந்த சங்கர் சித்ராதேவி என்பவர், விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில் ஏறிய நபருடன் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை கத்தியால் தாக்கி நகைகளை பறித்து சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, ஆட்டோ ஓட்டுநர் தங்கபாண்டி என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ஆட்டோ மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ராமநாதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.