சென்னை போரூர் அருகே சாலையோரம் நின்ற லாரியின் மீது ஆட்டோ மோதியதில் அதில் பயணித்த பாட்டி மற்றும் அவரது பேத்தி பரிதாபமாக உயிரிழந்தனர். தாம்பரத்தில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது நடந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.