கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அதிகாலையில் ஆட்டோவும், டாட்டா ஏஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 2 வாகனங்களின் ஓட்டுநர்களும் படுகாயமடைந்தனர். பண்ருட்டியில் இருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ, திருவதிகை அணைக்கட்டு பகுதியில் வந்த போது, பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்த டாட்டா ஏஸ் வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. ஓட்டுநர்கள் இருவரும் படுகாயமடைந்து, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.