சென்னை ஐயப்பன் தாங்கலில் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஆட்டோ சாகசத்தில் ஈடுபட்ட கும்பலை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பூந்தமல்லி - மவுண்ட் சாலையின் குறுக்கே ஆட்டோவை ஆபத்தான முறையில் இயக்கி சாகசத்தில் ஈடுபட்ட சிலர், அத்துமீறி வழியை மறித்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர்.