தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியில், பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு நேர்த்திக்கடனாக வந்த சேலைகளை, பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமைவாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா மற்றும் ஏனைய திருவிழா காலங்களில் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனாக படைக்கும் சேலைகளை ஏலம் விடுவது வழக்கம். சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில், இன்று ஏலம் விடப்பட்டது. சாமிக்கு படைக்கப்பட்ட 1360 சேலைகளை பக்தர்கள் போட்டி போட்டி ஏலத்தில் எடுத்தனர். ஏலம்போன சேலைகளின் மொத்த மதிப்பு 4.5 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.