மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில், பருத்தி கிலோ 55 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்தனர். பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக 7623 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 5250 ரூபாய்க்கும், சராசரி விலையாக 6500 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 2 ஆயிரம் குவிண்டால் பருத்தி 1 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. வயலில் பருத்தியை எடுத்து விற்பனைக்கு கொண்டு வரும் வரை கிலோவுக்கு 20 ரூபாய்க்கு மேல் செலவாகும் நிலையில், ஏலத்தில் எடுக்கப்பட்ட விலை போதுமானதாக இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதையும் படியுங்கள்: பிரிந்து வாழ்ந்து வரும் கணவன் - மனைவி... மனைவி சென்ற காரை துரத்திய கணவன்