கரூரில் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் உள்ள மருந்தகத்தில் பணியாற்றும் பெண்ணிடம் மருந்து வாங்குவது போல் நடித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்ற நபரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. துணிகர செயலில் ஈடுபட்டு, தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.