சேலம் மாவட்ட ஆட்சியரகம் அருகே ஓடும் பேருந்தில் இளம்பெண்ணின் தங்க சங்கிலியை திருட முற்பட்டு தப்பியோட முயன்ற பெண்ணை மக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் பிடித்து தந்தனர். அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண் பவித்ரா, பணியை முடித்துவிட்டு அரசு பேருந்தில் வீடு திரும்பினார். செல்லும் வழியில் பேருந்தில் இருந்த மற்றொரு பெண், இளம்பெண் கழுத்திலிருந்த செயினை பறிக்க முற்பட்டதாக தெரிகிறது. இதனை பவித்ராவின் தோழி கண்டதும், திருட்டு முயற்சியில் ஈடுபட்ட பெண் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினார். உடனே பேருந்து நிறுத்தப்பட்டு அதிலிருந்தவர்கள் ஓடி சென்று திருட்டில் ஈடுபட முயன்ற பெண்ணை போலீசிடம் ஒப்படத்தனர்.