விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே டாஸ்மாக் கடையின் சுவரை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கூட்டேரிப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையை சூப்பர்வைசர் சங்கர் திறக்கவந்தபோது கடையின் சுவர் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை மேற்கொண்டதில் விலை உயர்ந்த மது பாட்டில்களை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது.