சென்னை தேனாம்பேட்டையில் ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் மையத்தில், அடையாளம் தெரியாத இருவர் உள்ளே புகுந்து, பேட்டரி அறையை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அந்த இருவரையும் பிடிக்க முயன்றனர்.