பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை வைக்க முயன்றபோது, அதனை தடுத்து நிறுத்திய போலீசாருடன் இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வி.களத்தூரில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது உரிய அனுமதியின்றி வழிபாடு நடத்த முற்பட்டதாககூறி விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டதோடு சிலர் கைதும் செய்யப்பட்டனர். இதையடுத்து இந்து முன்னணியினர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆட்டோவில் விநாயகர் சிலையை எடுத்து வந்தனர். அப்போது வழிமறித்த போலீசாருக்கும் இந்துமுன்னணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.