கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொள்ள முயன்றதாக இளைஞர் கைது செய்யப்பட்டார். பல்லடம் சாலை பகுதியை சேர்ந்த 24 வயதான நிதிஷ்குமார் என்ற அந்த இளைஞர், அப்பெண்ணை பின் தொடர்ந்து வீடு வரை சென்று, பின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.