ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே தனியார் அலுவலக கண்ணாடி மற்றும் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் திருட முயலும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. காவேரிப்பாக்கம் பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலை அருகே முகமத் அலி சித்திக் என்பவரின் J.M.என்டர்பிரைசஸ் அலுவலகத்தில் கடந்த 24ம் தேதி இரவு கண்ணாடி கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள பொருட்களை கொள்ளையடிக்க முயற்சித்து எதுவும் கிடைக்காததால் திரும்பி சென்றார். இது குறித்து சிசிடிவி காட்சிகளுடன் அளித்த புகாரில் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.