சென்னை மாதவரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 27 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதை பொருள் மற்றும் 15 லட்சம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வரும் விஜய்குமார் மற்றும் மணிவண்ணன், மூலக்கடை பேருந்து நிலையம் அருகே கைது செய்யப்பட்டனர்.