தருமபுரி மாவட்டம் மணியம்பாடி ஊராட்சியில் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் 30 லட்சத்தை கையாடல் செய்ய முயன்றதாகவும், அதற்கு துணை போகாததால் தன்னை தகுதிநீக்கம் செய்துவிட்டதாகவும் கூறி, அதிமுகவை சேர்ந்த துணைத் தலைவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். மணியம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா சரவணன், ஊராட்சி இருப்பில் உள்ள 30 லட்ச ரூபாயை எடுப்பதற்காக துணைத்தலைவர் ராசாத்தியிடம் ஒப்புதல் கேட்டதாகவும், அதற்கு ராசாத்தி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி ராசாத்தியை தகுதிநீக்கம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.