மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த மேலையூரில் எரிவாயு எண்ணெய் கிணற்றில் கசிவை சரிசெய்வதாக கூறி ஓஎன்ஜிசி நிறுவனம் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்வதாக குற்றம்சாட்டி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் உள்ள எண்ணெய் கிணற்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறி மராமத்து பணி என்ற பெயரில், ஓஎன்ஜிசி நிறுவனம் புதுப்பிக்கும் பணிகளை துவங்கியுள்ளதாக புகார் எழுந்தது. இதனை கண்டித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையும் படியுங்கள் :தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா... நவதானிய அலங்காரத்தில் மகா வாராஹி அம்மன் எழுந்தருளல்