கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் ஹார்டுவேர்ஸ் கடை முன்பு தூங்கி கொண்டிருந்த காவலாளியை மர்மகும்பல் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற சிசிடிவி காட்சி வெளியான நிலையில், 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீ கிருஷ்ணா மெஷினரீஸ் ஹார்டுவேர்ஸ் கடையின் முன்பு காவலாளி திம்மராயன் என்பவர் நாற்காலியில் அமர்ந்து தூங்கி கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.