விழுப்புரம் மாவட்டம் முகையூரில் பெண் வார்டு உறுப்பினரை செருப்பால் அடிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவர் மீது நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.முகையூர் ஊராட்சி வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் அஞ்சுகம், ஊராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், அஞ்சுகத்தின் வீட்டிற்கே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு செருப்பு மற்றும் கற்களால் தாக்க முயன்றார்.